தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

செர்பியாவில் தக் லைஃப் படப்பிடிப்பு!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:59 am

DIN

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

தக் லைஃப் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜன.24 துவங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெறுகிறது. இதற்காக, இயக்குநர் மணிரத்னம் செர்பியா கிளம்பிச் சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கிருந்து செர்பியா சென்று தக் லைஃப் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனத் தகவல்.

ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி

ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி

இப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

— Raaj Kamal Films International (@RKFI) January 24, 2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.