துப்பறிவாளன் - 2 படப்பிடிப்பு எப்போது?

துப்பறிவாளன் - 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
துப்பறிவாளன் - 2 படப்பிடிப்பு எப்போது?

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். செல்லமே படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமான விஷால், தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற தன் 34-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, தான் இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் - 2 பணிகளில் ஈடுபட இருக்கிறார். 

இதற்கிடையில், இன்று அரசியல் வருவது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில், தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்பதுபோல் தெரிவித்திருக்கிறார். 

இந்நிலையில், விஷால் லண்டனில் வருகிற பிப்.15 ஆம் தேதி துப்பறிவாளன் - 2 படத்தின் படப்பிடிப்பைத் துவங்கி ஒரே கட்டத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

முதலில், இப்படத்தை மிஷ்கின் இயக்க இருந்தார். ஆனால், விஷாலுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மிஷ்கின் இப்படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com