தனக்குத்தானே பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை!

சின்னத்திரை நாயகியான நடிகை செளந்தர்யா ரெட்டி தனது பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடியுள்ளார். 
தனக்குத்தானே பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை!

சின்னத்திரை நாயகியான நடிகை செளந்தர்யா ரெட்டி தனது பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடியுள்ளார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நாயகியாக நடிப்பவர் நடிகை செளந்தர்யா ரெட்டி. இவர் இதற்கு முன்பு தெலுங்கு மொழியில் தொடர்கள் நடித்து பிரபலமானவர். 

கர்நாடகத்தைச் சேர்ந்த இவர், ராஜி என்ற தொடரில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து படமதி சந்தியா ராகம் என்ற தெலுங்கு மொழி தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்தார். அந்தத் தொடரின் வெற்றிக்குப் பிறகு தமிழில் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். 

மீனாட்சி பொண்ணுங்க தொடரிலிருந்து..
மீனாட்சி பொண்ணுங்க தொடரிலிருந்து..

சமூக வலைதளத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய இவர், அவ்வபோது படப்பிடிப்பு தளத்தில் பதிவிடும் விடியோக்கள், புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவை. 

அந்தவகையில் தன்னுடைய பிறந்தநாளான இன்று, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், தனக்குத்தானே கேக் வெட்டி தனக்கே ஊட்டிக்கொண்டு பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனை அவரின் உதவியாளர்கள் படம்பிடித்துள்ளனர். 

பிறந்தநால் கேக்-உடன் நடிகை செளந்தர்யா ரெட்டி 
பிறந்தநால் கேக்-உடன் நடிகை செளந்தர்யா ரெட்டி 

விடியோவைப் பதிவிட்ட அவர், எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என தனக்குத்தானே வாழ்த்தியுள்ளார். இந்த விடியோவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com