இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வைரலாகும் கீர்த்தி ஷெட்டியின் அரபிக்குத்து நடனம்! 

நடிகை கீர்த்தி ஷெட்டி அரபிக்கு குத்து பாடலுக்கு நடனமாடிய விடியோ வைரலாகி வருகிறது. 

News image
Updated On :10 பிப்ரவரி 2024, 11:54 am

DIN


சூப்பர் 30 எனும் ஹிந்தி படத்தில் அறிமுகமானாலும் விஜய் சேதுபதியுடன் தெலுங்குப் படத்தில் 2021இல் உப்பெனா படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. பின்னர் ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் படங்களில் நடித்து கவனம் பெற்றார். 

இறுதியாக அவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது ஜெயம் ரவியுடன் ஜுனி, வா வாத்தியாரே, ஷர்வா 35 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பெல்லி டான்ஸ் எனப்படும் இடை நடனத்தில் பயிற்சி எடுத்து வருகிறார். 

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இருந்து அரபிக்குத்து பாடலுக்கு கீர்த்தி ஷெட்டி நடனமாடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கார்த்தியின் 26வது படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.