தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசியல் ஆசை இருக்கிறது: வாணி போஜன்

நடிகை வாணி போஜன் அரசியல் குறித்துப் பேசியுள்ளார்.

News image
Updated On :13 பிப்ரவரி 2024, 9:31 am

DIN

ஊட்டியில் பிறந்த வாணி போஜன் தனியார் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக தெய்வமகள் சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.  பின்னர் 2019இல் தெலுங்கில் ’மீக்கு மாத்திரமே செப்தா’ எனும் படத்திலும் 2022-ல் ’தமிழில் ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மலேசியா டூ அம்னீசியா, மிரள், லவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘செங்களம்’ இணையத்தொடரும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. 

இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வாணி போஜனிடம் நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

Story image

அதற்கு, வாணி போஜன், “யார் வேண்டுமானாலும் நல்லது செய்ய அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய்க்கு ஒரு வாய்ப்பு தரலாம் என நினைக்கிறேன். செங்களம் நடித்தபோது எனக்கும் அரசியல் ஆர்வம் இருந்தது. அரசியலுக்கு வருவேனா எனத் தெரியவில்லை. ஆனால், இப்போதும் அரசியல் விருப்பம் உள்ளது” எனப் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.