கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்: டாப்ஸி

கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்: டாப்ஸி

பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி தான் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
Published on

பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி தான் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

36 வயதான டாப்ஸி தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.

அனுராக் கஷ்யப் இயக்கத்தில் உருவான ‘டோபாரா’படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டன்கி’ திரைப்படம் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்றன.

நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார் டாப்ஸி. தற்போது 3 ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார்.

கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்: டாப்ஸி
19 வயதில் மறைந்த தங்கல் பட நடிகை!

ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் டாப்ஸி கூறியதாவது:

உங்கள் முகத்துக்கு முன்பாக ஆடையின்றி நிற்க நினைக்கும் நபர் நானில்லை. நீச்சல் உடையில் நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் மாதிரியான நபரும் நானில்லை. அதனோடு எதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும். நகைச்சுவையாவது இருக்க வேண்டும்.

கவர்ச்சி என்பது நான் உடுத்தும் உடையில் இல்லை; மாறாக எனது குணநலனில் இருக்கிறது. அதனால்தான் எனது ஹாட்னஸ் (கவர்ச்சி) இணையத்தை தீயாக்குகிறது நீச்சல் உடையை அல்ல. எனது வாழ்நாளெல்லாம் நான் ஃபிட்னஸுடன் இருக்க விரும்புகிறேன். எனது உடலுடனும் உணவுடனும் நான் மிகவும் இயல்பாக இருக்கிறேன். மேலும் ஒருவது தன்னம்பிக்கைதான் ஒரு புகைப்படத்தினை அழகாக மாற்றுகிறது.

கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்: டாப்ஸி
பர்த்மார்க் சாதாரண விஷயம் கிடையாது: இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்!

நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் அது சாதாரண கவர்ச்சி படமாக மட்டுமில்லாமல் அமைவது அதை இயக்கும் இயக்குநரைப் பொறுத்து அமைகிறது. நான் எப்போதும் டேவிட் தவான் சாரை (ஹிந்தியில் அறிமுகப்படுத்தியவர்) நன்றியுடன் இருக்கிறேன். அவர் என்னை சாஸ்மீ புட்டோர் படத்தின் என்னை கிளாமராக காட்டவில்லை; பின்னர் ஜுட்வா 2 கொடுத்தார். இரண்டிலும் நான் கிளாமராக நடிக்கவில்லை. இயக்குநர் சரியாக என்னை இயக்கினார்.

இந்த மாதிரி கதாபாத்திரங்களில் நான் சிறப்பாக நடிப்பேன் என இயக்குநர் கற்பனை செய்து பார்த்திருக்கிறார். கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இருக்கிறது. மேலும் எனது ரசிகர்களுக்கும் என்னை அந்த மாதிரி கதாபாத்திரங்களில் பார்க்க புதியதாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com