இளையராஜா பயோபிக் இயக்குநர் இவரா?

இளையராஜா பயோபிக் இயக்குநர் இவரா?

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை பிரபல இயக்குநர் இயக்க உள்ளதாகத் தகவல்.
Published on

1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். 

இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தையும் பெறுகின்றன. சமீப காலமாக வெளியாகும் தமிழ்ப் படங்களில் இளையராஜாவின் பின்னணி இசைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதற்கிடையே, நீண்ட நாள்களாக இளையராஜா தன் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்காக முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து திரைக்கதையை எழுதி வருவதாகவும் இப்படத்தை இயக்குநர் பால்கி இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. 

இளையராஜா பயோபிக் இயக்குநர் இவரா?
டான் இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?

இப்படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. காரணம், இளையராஜா தனிப்பட்ட முறையிலேயே தனுஷின் நடிப்புத் திறனை விரும்புகிறவராம்.

இந்நிலையில், இப்படத்தை சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரேன் இயக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com