கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரசிகரின் செல்போனை பறித்து விடியோவை நீக்கிய அஜித்குமார்!

நடிகர் அஜித் குமார் ரசிகர் ஒருவரின் செல்போனை பறித்து விடியோவினை நீக்கியுள்ளார். 

News image
Updated On :4 ஜனவரி 2024, 4:11 pm

DIN

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். 

நடிகர் அஜித்குமார் தன் குடும்பத்தினருடன் புத்தாண்டைக் கொண்டாடிய விடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியிருந்தது. 

இந்நிலையில் மீண்டும் ஒரு விடியோ வைரலாகியுள்ளது. அதில் ரசிகர் ஒருவரின் செல்போனை பறி்த்து அவர் எடுத்த விடியோக்களை நீக்கியுள்ளார். ஆனால் அஜித்குமார் செய்ததையே இன்னொருவர் விடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

எப்போதும் ரசிகர்களுக்கு புகைப்படங்கள் எடுக்க நேரம் ஒதுக்கும் அஜித்குமார் இப்படி செய்வதில் எதாவது நியாயம் இருக்குமென பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

நடிகர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மதிப்பளிக்க வேண்டுமென ஒரு தரப்பினரும், நடிகர் அஜித் குமார் செய்தது தவறெனவும் மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஏற்கனவே இதுமாதிரி நடிகர் சிவகுமார் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது செல்போனை தட்டிவிட்டது பேசுபொருளானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.