மாயாண்டி குடும்பத்தார் - 2: மீண்டும் நடிகராகும் சீமான்
மாயாண்டி குடும்பத்தார் - 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மாயாண்டி குடும்பத்தார் - 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் இயக்கத்தில் கடந்த 2009-ல் வெளியான திரைப்படம் மாயாண்டி குடும்பத்தார். இப்படத்தில் மணிவண்ணன், சீமான், தருண் கோபி, பொண்வண்ணன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருதில் 2 ஆம் பரிசை மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்துக்கு கிடைத்தது.
இந்நிலையில், மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை முதல் பாகத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறது.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!
மாயாண்டி குடும்பத்தார் முதல் பாகத்தில் நடித்த கே.பி. ஜெகன் இப்படத்தை இயக்குகிறார். அரசியல் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் சீமான், இப்படத்தின் மூலம் மீண்டும் நடிகராக களமிறங்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...