இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

எளிமையாக இருந்தவர் கருணாநிதி: நடிகர் ரஜினிகாந்த்

கோபாலபுரம் வீட்டில் எளிமையாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப் படம்.
Updated On :6 ஜனவரி 2024, 4:50 pm

DIN

கோபாலபுரம் வீட்டில் எளிமையாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திரையுலகினர் நடத்தும் விழா சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், ஆந்திர அமைச்சர் ரோஜ, நடிகர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

விழாவில் பங்கேற்று பேசிய ரஜினிகாந்த், கலைஞர் குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என எனக்கு தெரியாது. அந்தளவிற்கு கலைஞரால் ஈர்க்கப்பட்டவன் நான். கலைஞர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவிலேயே இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆரை உருவாக்கி இருப்பார். 

கோபாலபுரம் வீட்டில் எளிமையாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. 1955ல் தனது சம்பளத்தில் கோபாலபுரம் வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதி வாங்கினார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருத்துவ செலவை ஏற்றவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.