இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பல சமூக மாற்றங்களை திரையில் கொண்டு வந்தவர் கலைஞர்: நடிகர் சூர்யா புகழாரம் 

பல சமூக மாற்றங்களை திரையில் கொண்டு வந்தவர் கலைஞர் என்று நடிகர் சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.

News image
கோப்புப் படம்.
Updated On :6 ஜனவரி 2024, 4:32 pm

DIN

பல சமூக மாற்றங்களை திரையில் கொண்டு வந்தவர் கலைஞர் என்று நடிகர் சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திரையுலகினர் நடத்தும் விழா சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், ஆந்திர அமைச்சர் ரோஜா, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யா, திரைத்துறையில் கலைஞரின் எழுத்தாற்றல் மிகவும் முக்கியமானது. பெண்களுக்கு சொத்துரிமை, சமூகநீதி என பல மாற்றங்களை திரைத்துறையின் மூலம் கொண்டு வந்து சேர்த்தவர் கலைஞர். அவரிடம் ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். 

கலைஞருக்கும் அவரது எழுதுகோலுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கலைஞர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். சினிமாவை சக்திவாய்ந்த ஆயுதமாக மாற்றி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனும் டிரெண்ட் செட் செய்தவர் கலைஞர். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.