இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வரும் ஜன.14 அன்று நடைபெறுகிறது.
பிக் பாஸ் 7 ஆவது சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.
சென்ற வாரம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பூர்ணிமா ரவி இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து, வார இறுதி எவிக்ஷனில் விசித்ரா வெளியேறினார்.
இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அதன்படி வினுஷா, அக்ஷயா, சரவணவிக்ரம், கூல் சுரேஷ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
இதையும் படிக்க: கேப்டன் மில்லர் தீயாக இருக்கிறது: ஜி.வி.பிரகாஷ்
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா, மாயா, மணி, விஜய்வர்மா ஆகியோர் உள்ளனர். இவர்களில் இருந்து மிட் வீக் எவிக்ஷனில் விஜய் வர்மா வெளியேறிவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்: மு.க. ஸ்டாலின்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பசுமை எரிசக்தி நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
தோல்வியடைந்த அமித் ஷா பதவி விலக வேண்டும்: சிஜேபி நிறுவனர் அபிஜீத்

ஜனநாயக விரோதம்! திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



