மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்) படமாக எடுத்துள்ளார்கள். இதில் நடிகர் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.
மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக்கொண்டு ஆட்டுப்பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு. 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கரோனா காரணமாக படப்பிடிப்பு எப்படியெல்லாம் தள்ளிப்போனது குறித்து நடிகர் பிருத்விராஜ் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்க: விஜயகாந்த் மகனுடன் நடிக்கத் தயார்: ராகவா லாரன்ஸ்
கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார்.
இப்படம் வருகிற 2024, ஏப்ரல் 10 ஆம் தேதி உலகளவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், படத்தின் முதல் தோற்றப் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எல்லையில் ட்ரோன் ஊடுருவல் முயற்சி: காஷ்மீரில் 2 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!

மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் பலி!

புறக்கணிக்கப்பட்ட கேரளா ஸ்டோரி - 2?

திமுக - விசிக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

