தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தாமதம் மதிப்புக்குரியது: வடக்குப்பட்டி ராமசாமி டிரைலர் குறித்து சந்தானம்!

தாமதம் மதிப்புக்குரியது என்று வடக்குப்பட்டி ராமசாமி டிரைலர் குறித்து நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 ஜனவரி 2024, 12:15 pm

தாமதம் மதிப்புக்குரியது என்று வடக்குப்பட்டி ராமசாமி டிரைலர் குறித்து நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாணின் 80-ஸ் பில்டப் என்ற படத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

சந்தானம் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. சந்தானத்துக்கு ஜோடியாக இப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். டி.ஜி. விஷ்வ பிரசாத்தின் பீபுள் மீடியா பேக்டரி இப்படத்தை தயாரிக்க ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். 

இப்படத்துக்கு தீபக் ஒளிப்பதிவு, மகேஷ் மேத்தீவ் சண்டைப் பயிற்சி, அறிவு மற்றும் பாக்கியம் சங்கர் பாடல்களை எழுதியுள்ளனர். வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வரும் பிப். 2 ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் டிரைலர் இன்று (ஜன. 11) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்த இருந்தது. 

இந்த நிலையில் நடிகர் சந்தானம் அவரது எக்ஸ் பக்கத்தில், “வடக்கப்பட்டி ராமசாமி டிரெய்லருடன் மேலும் சிறப்பான புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள்! தாமதம் மதிப்புக்குரியது, சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பெரிய வெளிப்பாட்டிற்கு தயாராகுங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

சந்தானத்தின் இந்தப் பதிவின் மூலம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் பின்னர் வெளியாகும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.