மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விஷாலின் ரத்னம் அப்டேட்!

விஷால் நடிக்கும் ‘ரத்னம்’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2024, 3:03 pm

‘மார்க் ஆண்டனி’  வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம் ரத்னம். இந்த படத்தை ஹரி இயக்கி வருகிறார். தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 

கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்துக்கு தேவி பிரசாத் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 

இயக்குநர் ஹரிக்கே உரிதான ஆக்ஷன் பாணியில் படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் சிங்கிள் ஷாட் காட்சியில் 5 நிமிட சண்டைக்காட்சியைப் படமாக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளார். இதற்கான, அறிவிப்பு விடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் காட்சியமைப்பைக் குறித்து விஷாலிடம் பேகிறார். இந்த விடியோ, எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.