பிக்பாஸ் 7-வது சீசன் முடிந்தது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற இப்போட்டியில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, பவா செல்லத்துரை, விசித்ரா, மாயா, நிக்சன் உள்பட 23 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கினர். ஒரு மாதம் கழித்து அர்ச்சனா, தினேஷ், அன் பாரதி, கானா பாலா, பிராவோ ஆகிய 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியில் உள்ளே நுழைந்தனர். இதனால், இந்த சீசன் பெரிதாகக் கவனிக்கப்பட்டது.
இறுதிச்சுற்றில் அர்ச்சனா, மாயா, விஷ்ணு, மணி, தினேஷ் ஆகியோர் போட்டியிட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் வெற்றியாளராக விஜே அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் மணிக்குக் கிடைத்தது. பெரிதும் கவனிக்கப்பட்ட மாயா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
Namma jeichutom maara moment for All #VJArchana fans
Haters gonna hate ignore calmly
Nandri Vanakam #BiggBossTamil7 #BiggBoss7Tamil #BB7TitleWinnerArchana pic.twitter.com/4cwX6QinrQ— Sekar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.