விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் எதிர் நீச்சல் தொடர் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்கா உள்பட பல இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நடிகை கனிகா - இயக்குநர் வெங்கட் பிரபு
இந்த நிலையில், எதிர் நீச்சல் தொடரில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கும் கனிகா கோட் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், நடிகை கனிகா அதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது ரசிகர்கள் கோட் படத்தில் உங்களை பார்க்கலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக இயக்குநர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக புகைப்படம் வெளியிட்டு தெரிவித்து இருந்தார் நடிகை கனிகா.
நடிகை கனிகா - இயக்குநர் மிஷ்கின்
நடிகை கனிகா ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் அறிமுகமாகி சேரனின் ஆட்டோகிராஃப், அஜித்தின் வரலாறு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கும், அந்நியன் படத்தில் சதாவுக்கும், சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கும் பின்னனி குரல் கொடுத்துள்ளார்.
இதையும் படிக்க: ஓராண்டு நிறைவு... டிஆர்பியில் கலக்கும் இரு தொடர்கள்!
இதனால் நடிகை கனிகா கோட் படத்தில் நடித்துள்ளாரா அல்லது பின்னனி குரல் கொடுத்துள்ளாரா என்ற தகவல் பின்வரும் நாள்களில் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 9 - நேரலை!

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்- ஒடுகத்தூரில் வினோத நிகழ்வு

செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்

மகாராஷ்டிரத்தில் நில அதிர்வுகள்: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



