தேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்! அபிஜித் தீப்கேஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்!திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை79 மின் திருட்டு கண்டுபிடிப்பு: 1.01 கோடி இழப்பீடு வசூல்காங்கிரஸ் வேட்பாளரை போட்டியில் அனுமதிக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு உயா்நீதின்றம் அறிவுறுத்தல்இல்லத்தரசிகள் இருக்க முடியும் என்றால் இல்லத்தரசா்களும் இருக்க முடியும்: உயா்நீதிமன்றம்வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழக அரசு ஊழியா்களுக்கு இன்றே ஊதியம்ஞானேஷ் குமாரை பதவி நீக்க மீண்டும் நோட்டீஸ்: தயாராகும் எதிா்க்கட்சிகள்!

ஓராண்டு நிறைவு... டிஆர்பியில் கலக்கும் இரு தொடர்கள்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரை இயக்கிய எஸ். குமரன் இந்தத் தொடரை இயக்குகிறார். 

Published On :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி, சிறகடிக்க ஆசை ஆகிய இரு தொடர்கள் ஓராண்டை நிறைவு செய்துள்ளன. இதில் சிறகடிக்க ஆசை தொடர் டிஆர்பியில் முதல் 10 தொடர்களில் ஒன்றாக இடம்பெற்றுவிடுகிறது. 

மகாநதி தொடரும் மற்ற தொலைக்காட்சித் தொடர்களைக் காட்டிலும் குறிப்பிடத்தகுந்த டிஆர்பி பெறுகிறது. இந்த இரு தொடர்களும் தற்போது ஓராண்டை நிறைவு செய்துள்ளதால், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை திவ்யா கணேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் லஷ்மி பிரியா, அனந்தராமன், ருத்ரன் பிரதீவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதற்கு முன்பு நடிகை பிரதீபா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் திரைப்படங்களில் நடிப்பதால், மகாநதி தொடரிலிருந்து விலகியுள்ளார். 

சிறகடிக்க ஆசை - மகாநதி தொடர் முதன்மை நடிகர்கள்

சிறகடிக்க ஆசை - மகாநதி தொடர் முதன்மை நடிகர்கள்

தற்போது இந்தத் தொடர் 5.13 புள்ளிகளுடன் டிஆர்பி பட்டியலில் 13வது இடத்தைப் பிடித்துள்ளது. தந்தையை இழந்த 4 சகோதரிகளின் கதை என்பதால், மகாநதி தொடர் இன்னும் பல மாதங்களுக்கு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று சிறகடிக்க ஆசை தொடரும் விஜய் தொலைக்காட்சியில் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்தத் தொடரும் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரை திருமணம் செய்துகொள்ளும் பூக்கடையில் பணிபுரியும் பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்களும் சவால்களுமே சிறகடிக்க ஆசை தொடரின் கதை. 

சிறகடிக்க ஆசை தொடரில் நடிகை கோமதி பிரியா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் வெற்றி வசந்த் நடித்து வருகிறார். 

சிறகடிக்க ஆசை தொடர் 8.27 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இது இந்த மாதத்துக்கான நிலவரம். கடந்த சில மாதங்களில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக சிறகடிக்க ஆசை தொடர் இருந்தது.

வணிக ரீதியிலும் மக்கள் மத்தியிலும் சிறகடிக்க ஆசை தொடருக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரை இயக்கிய எஸ். குமரன் இந்தத் தொடரை இயக்குகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.