மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

துப்பறிவாளன் - 2 அப்டேட்!

விஷால் நடிப்பில் உருவாக உள்ள துப்பறிவாளன் - 2 படம் குறித்து புதிய அப்டேட்.

News image
Updated On :23 ஜனவரி 2024, 9:37 am

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். படத்தின் வெற்றி காரணமாக, இரண்டாம் பாக பணிகளில் மிஷ்கின் கவனம் செலுத்தினார். ஆனால், விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இப்படத்திலிருந்து மிஷ்கின் விலகினார். படம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் விஷால் தானே இயக்கி நடிக்க முடிவு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 

அதேநேரம், துப்பறிவாளன் - 2 படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, தன் அடுத்தடுத்த படங்களில் விஷால் கவனம் செலுத்தினார். அவர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது. தற்போது, ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், விஷால் இன்று எக்ஸ் தளத்தில் துப்பறிவாளனைக் குறிக்கும் புகைப்படத்தை முகப்புப் படமாக வைத்திருக்கிறார். இதனால், விஷால் துப்பறிவாளன் - 2 படத்தின் பணிகளை மேற்கொள்வார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.