‘மார்க் ஆண்டனி’ வெற்றியைத் தொடர்ந்து விஷால் ஒப்பந்தமான படம் ரத்னம். இந்த படத்தை ஹரி இயக்கி வருகிறார். தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்துக்கு தேவி பிரசாத் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் கார்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இதையும் படிக்க: அயலான் - 2!
இயக்குநர் ஹரிக்கே உரிதான ஆக்ஷன் பாணியில் படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்து தெரிவித்த விஷால், “ரத்னம் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இயக்குநர் ஹரியுடன் மூன்றாவது முறையாக இணைந்தது மகிழ்ச்சி. தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னையில் நடைபெற்ற இப்படப்பிடிப்பு நல்ல நினைவாக இருக்கும். கார்த்திக் மற்றும் ஸ்டோன்பென்ச்க்கு நன்றி.” எனக் குறிப்பிட்டதுடன் இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என்பதையும் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

புதுவை பல்கலை. சமுதாய கல்லூரி விளையாட்டு விழா

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

