ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் இறுதியாக வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது, ஃபைட்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பதான் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படம் நாளை (ஜனவரி 25) உலகளவில் வெளியாகிறது. கதாநாயகியாக தீபிகா படுகோனும் முக்கிய கதாபாத்திரத்தில் அனில் கபூரும் நடித்துள்ளனர்.
வியோகாம் ஸ்டுடியோஸ், மார்ஃபிலிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் பிவிஆர் டிக்கெட் விலைகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளன. தில்லி ஆம்பியன்ஸ் பிவிஏர் மாலில் இயக்குநர் கட் எனப்படும் சென்சாரில் துண்டிக்கபடாத ஃபைட்டர் படத்தின் ஒரு டிக்கெட் விலை ரூ.2400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிட்டி மாலில் மாலைக் காட்சிக்கான ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1850!
இதையும் படிக்க: மறுவெளியீட்டிற்குத் தயாராகும் பருத்திவீரன்!
மேலும், மும்பை, கொல்கத்தாவில் உள்ள சில பிவிஆர் திரைகளிலும் முதல்நாளுக்கான டிக்கெட் விலைகள் ரூ.1700 க்கும் மேல் வசூலிக்கப்பட்டு வருகின்றன. பெங்களூரு, சென்னை பிவிஆரில் ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால், ஹிருத்திக் ரோஷன் படங்களிலேயே இதுவே அதிக டிக்கெட் விலை கொண்ட திரைப்படம் என்கிற சாதனையையும் ஃபைட்டர் செய்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லாஸ் ஏஞ்சலீஸ் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படும் மம்மூட்டி - மோகன்லாலின் பேட்ரியாட்!

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP

”மன்னிப்பு கூறியபின் விவாதம் வேண்டாம்” சர்ச்சைப் பேச்சுக்களுக்கு EPS பதில்!

எதிரே வந்த மினி வேன், பைக் மீது மோதிய அரசுப் பேருந்து! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!
வீடியோக்கள்

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

