சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இலனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: ரசிகர்களின் பேராதரவில் ப்ளூ ஸ்டார்!
ஸ்டார் திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வரும் பிப். 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது.
ஸ்டார் திரைப்படத்தின் முதல் பாடலான உனக்கென்ன நீ ஹீரோ என்ற பாடல் வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்பாடலை மதன்கார்கி எழுதியுள்ளார். யுவன்சங்கர் ராஜா பாடியுள்ளார்.
இதையும் படிக்க: அசோக் செல்வனின் சபா நாயகன் ஓடிடி ரிலீஸ் தேதி!
இந்நிலையில் நாயகி குறித்த அறிவிப்பினை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹே ஜிமிக்கி என நாயகியை டேக் செய்து இயக்குநர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் நாயகி அதிதி எஸ். போஹன்கர் நாயகியாக நடிக்கிறார். இவரது அறிவிப்பு விடியோவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.