பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சைரன் அப்டேட்!

நடிகர் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 11:42 am

DIN

பொன்னியின் செல்வன் திரைப்படத்த்துக்குப் பின் ஜெயம் ரவியின் இறைவன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது. தொடர்ந்து, அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்கும் 'சைரன்' என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

Story image

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

 சைரன் திரைப்படம் வருகிற பிப். 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘நேற்று வரை’ பாடல் நாளை (ஜன.29) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ’ஜீனி’ என்கிற ஃபேண்டசி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.