நடிகர் கவின் நாயகனாக நடித்து வரும் ஸ்டார் படத்தின் நாயகி குறித்த அறிவுப்பு விடியோ வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இலனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஸ்டார் திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வரும் பிப். 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படிக்க: ரோஜா தொடர் நாயகனின் புதிய தொடர்!
இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக அதிதி எஸ். போஹன்கர் நடிக்கவுள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.