விடாமுயற்சி அஜர்பைஜன் படப்பிடிப்பு நிறைவு!

விடாமுயற்சி படத்தின் அஜர்பைஜன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கியது.

இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் விடாமுயற்சி கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அஜித் புகைப்படம் எடுத்திருந்தார். அவை இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன.

விடாமுயற்சியின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளதை நெட்பிளிக்ஸ் நிறுவனம்  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் அஜர்பைஜன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வேறு இடத்தில் விரைவில் துவங்கும் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com