அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2022இல் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் அதிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வில்லனாக நடிக்கும் ஃபகத் ஃபாசிலுக்கான படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவுடன் 'கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததற்குப் பின் பிரபலமான இவர் தெலுங்கில் முக்கிய நடிகர்களின் நாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார். புஷ்பா 2வில் நடிக்க அவரது சம்பளம் உயர்த்தியதாகவும் தகவல் வெளியானது.
இதையும் படிக்க: நடிகர் விஜய்யின் கட்சி பெயர் இதுவா?
ஷ்பா படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டதும். படக்குழு புஷ்பா - 2 திரைப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம், ’படம் வெளியாக இன்னும் 200 நாள்களே உள்ளன’ என நினைவுப்படுத்தும் போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,235 கோடி டாலராக அதிகரிப்பு!
கா்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: முதல்வர் விஜய்க்கு விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை!

இன்றைய ராசி பலன்கள் (02.08.2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி!

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 02) - லாபம் அதிகரிக்கும் இந்த ராசிக்கு!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


