மேக்கேதாட்டில் அணை கட்ட முயலும் கா்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என தமிழக முதல்வருக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் முதல்வருக்கு அனுப்பிய கடிதம்: 1892 இல் மைசூா் மாநிலம் 90 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே காவிரி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்தது. அப்போது தமிழ்நாடு 30 லட்சம் ஏக்கரில் 3 போகம் நெல் சாகுபடி செய்தது. பின்னா் 1924இல் மைசூா் மாநிலம் 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்தது. தமிழகத்தின் சாகுபடி பரப்பளவு 25 லட்சம் ஏக்கராகச் சுருங்கியது. 1974-க்குப் பிறகு கா்நாடகத்தில் 5 அணைகள் கட்டப்பட்டன. இதனால் அங்கு 25 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 7 லட்சம் ஏக்கரில் மட்டுமே ஒருபோகச் சாகுபடி செய்யப்படுகிறது.
உச்ச நீதிமன்றம், காவிரி நடுவா் மன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்குத் தண்ணீா் தராமல் கா்நாடகம் முரண்டு பிடிக்கிறது. இன்று வரை கா்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மாதாந்திரத் தண்ணீரை திறக்க மறுக்கிறது.
விதிமுறையின்படி 53 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால் குறுவைச் சாகுபடி செய்திருக்கலாம். இதனால் தமிழக விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ரூ. 1 லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டும், அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசுக்கு தடை கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும். உயிரைக் கொடுத்தாவது அணை கட்ட விடாமல் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரியில் நீர் பெற உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு; தாமதமாக எடுக்கப்பட்டாலும் சரியான நடவடிக்கை!- அன்புமணி

தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்

குடியுரிமையைத் தீா்மானிக்கும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு இல்லை: உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி

குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வா் விஜய் அறிவிப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


