மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

’விஜய் அரசியலுக்கு வருவது..’: மிஷ்கின் கருத்து

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து இயக்குநர் மிஷ்கின் கருத்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 11:35 am

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி  நுட்பமான கதைகளை இயக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின். 

இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், சமீபத்தில் இசை பயிற்சியும் எடுத்துக்கொண்டார். டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

மேலும், நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ வெற்றிப்படமாக அமைந்தது. லியோவிலும் கவனிக்கும்படியாக நடித்திருந்தார்.

தற்போது, மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் டிரெயின் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட மிஷ்கினிடம், ‘நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்’ எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு மிஷ்கின், “விஜய் அரசியலுக்கு வருவது பற்றி பேச எனக்கு எந்த விருப்பமும் இல்லை. 25 ஆண்டுகளாக விஜய்யை எனக்குத் தெரியும். என்னிடம் மிக அன்பாக, மேன்மையாகப் பழகியிருக்கிறார். விஜய் நூறு வயது வரை வாழ வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் அவரை நேசிக்கிறார்கள். உதயநிதி அரசியலுக்கு வந்தார். என் படப்பிடிப்புக்கு வரும்போது அரசியல் சந்திப்புகளை கவனிப்பார். இன்று, நேரமில்லாமல் பல வேலைகளைச் செய்து வருகிறார். அதை அருகிலிருந்து கவனித்திருக்கிறேன். அதுபோல், விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு?” என பதிலளித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.