ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

கமலுடன் மோதும் பார்த்திபன்!

நடிகர் கமல்ஹாசன் படத்துடன் பார்த்திபனின் படமும் வெளியாகவுள்ளது.

கமலுடன் மோதும் பார்த்திபன்

Published On :

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவர் பார்த்திபன்.

பார்த்திபன் இயக்கத்தில் இறுதியாக வெளியான நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழல் திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டுக்களைப் பெற்றதுடன் வசூலிலும் வெற்றிப்படமானது. தற்போது, சிறுவர்களை வைத்து டீன்ஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படம் வரும் ஜூலை 12ஆம் நாள் வெளியாகவுள்ளது.

டீன்ஸ் போஸ்டர்

டீன்ஸ் போஸ்டர்

இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், இப்படத்தில் நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தியன் - 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 திரைப்படத்தினைவிட குறைவான திரையரங்குகளில் வெளியாகும் டீன்ஸ் கதை, திரைக்கதையில் நன்றாக இருந்தால் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.