டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

விடாமுயற்சி படத்தின் 2 புதிய போஸ்டர்கள்!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

விடாமுயற்சி படத்தில் அஜித்குமார் - ட்விட்டர்

Published On :

நடிகர் அஜித் குமார் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் இரு புதிய போஸ்டர்களை படக்குழு இன்று (ஜூலை 7) வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த மாதம் 30ஆம் தேதி புதிய தோற்றம் வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டு போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் மகிழ்த்திருமேனி இயக்கிவருகிறார். தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அஜித் குமாரை இவர் இயக்குகிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அஜித் குமாருடன் நடிகர் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இரு புதிய போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இப்படங்களை வெளியிட்டு, முயற்சிகள் ஒருபோதும் தோற்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.