டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது! 9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

பைரவா படம் நீண்ட காலங்களுக்கு நினைவிருக்கும்: சிவராஜ்குமார் நம்பிக்கை!

பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனது புதிய படம் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

சிவராஜ்குமார்

Published On :

சமீபத்தில் கன்னடத்தில் சப்த சாகரதாச்சே எல்லோ- சைடு ஏ, சைடு பி என இரண்டு பாகங்களாக திரையரங்குகளில் வெளியான படம் நல்ல வரவேற்பினை பெற்றன. 

தொடர்ந்து ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பின் இந்திய அளவில் இப்படம் கவனம் ஈர்த்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கத்தில் சிவராஜ் குமார் இணைந்து நடிக்கவிருக்கிறார். இதன் பெயர் பைரவா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து நடிகர் சிவராஜ்குமார், "இந்தப் படம் குறித்து நீண்ட காலம் பேசுவார்கள். பைரவா கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கதையின் ஒவ்வொரு துணுக்கும் எனக்கு பிடித்த்ருக்கிறது; ஹேமந்த் குழுவுடன் பணியாற்றுவதில் ஆவலுடன் இருக்கிறேன்" என்றார்.

இது குறித்து இயக்குநர், “இந்தப்படம் எனது பேராவலான திரைப்படம். இந்தப் படத்தின் கதை பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதை. பழங்கால கதையாக இருந்தாலும் நிகழ்கால போர் முறைகளை போன்ற படமாக்கும் விதம் இருக்கும். இந்தப் படத்தில் நான் உருவாக்கவிருக்கும் அனுபவத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஜெயிலர் படத்தில் நடித்ததின்மூலம் சிவராஜ்குமாருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் கேப்டன் மில்லரிலும் நடித்திருந்தார்.

இந்த பைரவா படம் கன்னடம் உள்பட தமிழ் தெலுங்கில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.