ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமில்லை: ஷிவாதா நாயர்!

நடிகை ஷிவாதா நாயர் புதிய கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஷிவாதா நாயர்
ஷிவாதா நாயர்
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் பிறந்து பின்னர் கேரளாவில் குடியேறியவர் நடிகை ஸ்ரீ லேகா நாயர் எனும் ஷிவாதா நாயர். 2009இல் கேரளா கபே எனும் படத்தில் அறிமுகமானார். தமிழில் நெடுஞ்சாலை படத்தில் நடித்து பிரபலாமானார்.

ஜீரோ, அதே கண்கள், தீராக் காதல் ஆகிய படங்களில் நடிதுள்ளார்.

சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

யோகா செய்யும் ஷிவாதா நாயர்
யோகா செய்யும் ஷிவாதா நாயர்
ஷிவாதா நாயர்
படத் தலைப்புகளை கன்னட மொழியின் பாரம்பரியத்தில்தான் வைப்பேன்: இயக்குநர் ஹேமந்த் ராவ்

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஷிவாதா கூறியதாவது:

எனக்கு கருடன் படத்தின் படப்பிடிப்பின்போதே நல்ல வைஃப் தெரிந்தது. நான் நிறைய படங்களில் நடிக்காததற்கு காரணம் ஒரே மாதிரியான கதாபாங்களில் நடிக்க அழைப்பதால்தான். நான் பல வகையான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

எனக்கு குடும்பம் இருக்கிறது. அதைப் பார்த்துக்கொள்ள வேண்டும். இருப்பினும் சினிமாவில் நாயகியாக நடிக்கவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவும் வாய்ப்பு வருகிறது. இறவாக்காலம் படத்தில் மாடர்னாக நடித்துள்ளேன். அந்தப் படம் வரும்போது எனக்கு புதிய வாய்ப்புகள் வருமென நினைக்கிறேன்.

ஷிவாதா நாயர்
தமிழ்ப் பெண்ணா, மலையாளப் பெண்ணா?
ஷிவாதா
ஷிவாதா

அனைத்து வகையான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். தலைமுடி மாற்றுதல், வித்தியாசமான உடைகள், அதற்கேற்றார்போல உடலையும் தகவமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்.

நான் எப்போதும் கலைத்துறையில் இருக்க விரும்புகிறேன். அதுதான் எனது வாழ்நாள் ஆசையும்கூட.

கேரள அரசின் மாநில விருதுக்கு பலரும் என்னை அழைத்து பாராட்டினார்கள். நான் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அவர்கள் எனது புதிய வீட்டுக்கு வாழ்த்துகிறார்கள் என்று நினைத்திருந்தேன். வேலையில் 100 சதவிகிதம் உழைப்பு தருவேன். விருது பாராட்டுகள் எல்லாம் போனஸ்மாதிரி என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com