கயல், சிங்கப் பெண்ணேயை முந்தி... முதலிடத்தைப் பிடித்த சிறகடிக்க ஆசை!

கோமதி பிரியா, வெற்றி வசந்த் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சிறகடிக்க ஆசை தொடரின் போஸ்டர்
சிறகடிக்க ஆசை தொடரின் போஸ்டர்ட்விட்டர்
Published on
Updated on
2 min read

சிறகடிக்க ஆசை தொடர் சின்னத்திரையில் தொலைக்காட்சித் தொடர்களில் முதன்மையான தொடர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

மிகவும் பிரபலமான நடிகை, நடிகர்கள் நடிக்காமல், கதை மற்றும் கதாபாத்திரங்களின் அடத்தியால் படிப்படியாக சிறகடிக்க ஆசை தொடர் மக்கள் மனங்களைக் கவர்ந்து, தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது. இதனால், தொடர்களுக்கு சமூகவலைதளத்தில் தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

அந்தவகையில் சிறகடிக்க ஆசை தொடருக்கு சமூக வலைதளங்களிலும் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

வெற்றி வசந்த், கோமதி பிரியா
வெற்றி வசந்த், கோமதி பிரியா

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரில், கோமதி பிரியா, வெற்றி வசந்த் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். குரு சம்பத்குமார் திரைக்கதை எழுத எஸ். குமரன் இயக்குகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பன திருமதி செல்வம் தொடரை இயக்கியவர்.

சிறகடிக்க ஆசை தொடர் இந்த வாரம் 8.38 புள்ளிகளைப் பெற்று டிஆர்பி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்பு வரை சன் தொலைக்காட்சியில் கயல், சிங்கப் பெண்ணே ஆகிய இரு தொடர்கள் மட்டுமே முதலிடத்தில் நீடித்து வந்தன. தற்போது அந்த இரு தொடர்களையும் பின்னுக்குத்தள்ளி சிறகடிக்க ஆசை தொடர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சிறகடிக்க ஆசை தொடரின் போஸ்டர்
இந்தியன் -2 பிடிக்கவில்லையா? சிறகடிக்க ஆசை தொடர் நாயகன் விமர்சனம்!
மீனா பாத்திரத்தில் கோமதி பிரியா
மீனா பாத்திரத்தில் கோமதி பிரியா

அரிதாரம் இல்லாமல் இயல்பான மக்களின் வாழ்கையை பிரதிபலிக்கும் வகையில் சிறகடிக்க ஆசை தொடரின் முதன்மை பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதே இத்தொடரின் இயல்பான வெற்றிக்கு காரணம் என்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.

தொடர் இந்த வாரம் சிங்கப்பெண்ணே தொடர் டிஆர்பி பட்டியலில் 8.27 புள்ளிகளையும், கயல் தொடர் 8.08 புள்ளிகளையும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.