படப்பிடிப்பில் இறந்த சண்டை கலைஞர்: கார்த்தி நேரில் அஞ்சலி!

படப்பிடிப்பில் இறந்த சண்டை கலைஞர்: கார்த்தி நேரில் அஞ்சலி!
Published on
Updated on
1 min read

சர்தார் - 2 படப்பிடிப்பில் இறந்த சண்டை கலைஞர் உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார்.

நடிகா் காா்த்தி நடிப்பில், இயக்குநா் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சா்தாா் 2 திரைப்பட படப்பிடிப்பு கடந்த 15-ஆம் தேதி முதல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று ஒரு சண்டை காட்சியை திரைப்படக் குழுவினா், படமாக்கிக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு சண்டை கலைஞரான புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சோ்ந்த மு.ஏழுமலை (54), 20 அடி உயரத்தில் இருந்து திடீரென தவறி விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை படக் குழுவினா் மீட்டு அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் சிறிது நேரத்தில் இறந்தாா்.

இது குறித்து விருகம்பாக்கம் போலீஸாா் நடத்திய விசாரணையில், போதிய பாதுகாப்பு உபகரணம் இன்றி படப்பிடிப்பு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

படப்பிடிப்பில் இறந்த சண்டை கலைஞர்: கார்த்தி நேரில் அஞ்சலி!
ரமேஷ் நாராயணால் நடிகர் ஆசிஃப் அலி அவமதிக்கப்பட்டாரா? என்ன நடந்தது?

தொடர்ந்து, இன்று ஏழுமலையின் உடலக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று வேதனையுடன் அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com