தங்கலான் இசை வெளியீட்டு விழா எப்போது?
தங்கலான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


தங்கலான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்தது. இப்படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தங்கச் சுரங்கத்தைத் தேடிய ஆங்கிலேயர்களுக்கு உதவச் சென்ற குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொண்ட பிரச்னைகளாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இப்படம், ஆக.15ஆம் நாள் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...