

கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் வெளியீடு காணாமல் இருக்கிறது.
காரணமாக, இன்னும் இப்படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இதன் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தை ஏப்ரல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியன், கருப்பு திரைப்படத்தை ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு வெளியிடுவார் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.