பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

சிறை அதிகாரப்பூர்வ வசூல்!

சிறை திரைப்பட வசூல் குறித்து....

News image
Updated On :22 ஜனவரி 2026, 11:04 am IST

சிறை திரைப்படத்தின் வசூலி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார், அனிஷ்மா நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்த திரைப்படம் சிறை. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய இப்படம் சிறைக் கைதியின் காதல் கதையாகவும் இஸ்லாமியர்கள் மீதான குற்றப்பார்வை குறித்தும் அழுத்தமாக பேசியது.

சாதாரண காதல் கதையைக் கிளைமேக்ஸில் பரபரப்பாகச் சொல்லி ரசிகர்களை இருக்கை நுனிக்கு அழைத்துச் சென்று வெற்றியும் பெற்றனர்.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 31.58 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

இதில், தமிழகத்தில் மட்டும் ரூ. 27.27 கோடியையையும் கேரளத்தில் 30 லட்சத்தையும் கர்நாடகத்தில் ரூ.1.05 கோடியையும் வெளிநாடுகளில் ரூ. 2.95 கோடியையும் இப்படம் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

sirai movie collected more than 31 crores

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.