நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ராயன் எதிர்பாராத வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ராயன் திரைப்படத்தின் வசூல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2024, 6:24 am

ராயன் திரைப்படத்தின் வசூல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் (தனுஷ்) எதிர்கொள்ளும் பிரச்னைகளும் திருப்பங்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

அதேநேரம், படத்தைப் பார்க்கும் ஆர்வதிலும் பல ரசிகர்கள் முன்பதிவு செய்ததால், சனி மற்றும் ஞாயிறு காட்சிகள் ஹவுஸ்புல் ஆனது.

Story image

இந்த நிலையில், ராயன் திரைப்படம் முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ.75.2 கோடியை வசூலித்துள்ளதாக தனுஷ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தை பிளாக்பஸ்டர் படமாக்கியதற்காக நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

‘ஏ’ சான்றிதழுடன் திரைக்கு வந்து முதல் 3 நாளில் இத்தனை கோடிகளை வசூலித்த முதல் தமிழ்ப்படம் ராயன்தான்!

தனுஷ் வெளியிட்ட அறிக்கை.

தனுஷ் வெளியிட்ட அறிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.