மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கூலி படத்தில் அபிராமி?

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள கூலி படத்தில் அபிராமி இணைந்துள்ளதாகத் தகவல்.

News image
Updated On :6 ஜூன் 2024, 11:08 am

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இம்மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படத்திற்கான நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு நண்பராக நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார். 38 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.