காஞ்சனா - 4!

காஞ்சனா திரைப்படத்தின் 4ஆம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சனா - 4!

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது. குறிப்பாக, நடிகர் சரத்குமாரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து, காஞ்சனா - 2 படத்தை எடுத்தார். அதுவும் வணிக வெற்றியை அடைந்தது.

பின், 2019-ல் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கினார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வெற்றிப்படமானது.

தற்போது, ராகவேந்திரா புரடக்‌ஷன் தயாரிப்பில் லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா - 4 உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்குகிறது.

இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பெயர்கள் விரைவில் வெளியாகும் எனத் தகவல்.

காஞ்சனா - 4!
சித்தார்த்தின் புதிய பட போஸ்டர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com