மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆப்பிளை கிண்டலடித்து எலான் மஸ்க் வெளியிட்ட மீம்ஸ்! தமிழ் நடிகர் நன்றி!

எலான் மஸ்கிற்கு நன்றி தெரிவித்த தமிழ் நடிகர் துரை. சுதாகர்.

News image

நன்றி: எலான் மஸ்க், எக்ஸ் பக்கம்

Updated On :11 ஜூன் 2024, 9:13 am

ஆப்பிள் நிறுவனத்தை கிண்டலடித்து எலான் மஸ்க் வெளியிட்ட மீம்ஸ் வைரலான நிலையில், அதற்கு தமிழ் நடிகர் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மிக முன்னணி சமூக தளங்களில் ஒன்றான எக்ஸ் தளத்தின்‌ உரிமையாளர் எலன் மஸ்குக்கு நன்றி தெரிவித்து தமிழ் நடிகர் டிவீட் செய்திருக்கிறார்.

உலக அளவில் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருபவர் எலன் மஸ்க். சமூக வலைதள பக்கங்களில் ஒன்றான டிவிட்டரை வாங்கி அதனை எக்ஸ் என பெயர்மாற்றம் செய்து, பரபரப்பைக் கூட்டியவர். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர்.

அவ்வப்போது, உலகில் நடக்கும் விஷயங்களை பற்றி கிண்டல் செய்யும் வகையிலும் சர்ச்சையை கிளப்பும் வகையிலும் தொடர்ந்து பதிவுகளை செய்வதை வழக்கமாக கொண்டவர்.

அதுபோலத்தான் ஓபன் ஏஐ பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் மீது வரும் புகார்கள் தொடர்பாக, ஆப்பிள் நிறுவனத்தை கிண்டல் செய்து வெளியான மீம் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், தப்பாட்டம் என்ற தமிழ் திரைப்படத்தின் காட்சி பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்தப் பதிவால் மகிழ்ச்சி அடைந்த தப்பாட்டம் படத்தின் நடிகரும் - தயாரிப்பாளருமான துரை.சுதாகர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்துள்ளார். தப்பாட்டம் திரைப்படத்தின் காட்சி அடங்கிய மீம்ஸை பதிவிட்டிருப்பதற்கு அவர் நன்றி சொல்லியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.