
சின்னத்திரை தம்பதியான ஆல்யா மானசா - சஞ்சீவ் தங்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றியுள்ளனர்.
சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறியுள்ளனர். புதுமனை புகுவிழாவிற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆல்யா மானசா - சஞ்சீவ் ஆகியோர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான காதல் ஜோடி.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவா்சஞ்சீவ், ஆல்யா மானசா.
இத்தொடரில் கணவன் மனைவியாக நடித்த இவா்கள், நிஜத்திலும் காதலா்களாகி கட்நத 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனா். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தற்போது ஆல்யா மானசா இனியா தொடரிலும், சஞ்சீவ் கயல் தொடரிலும் நடித்து வருகின்றனர். இந்த இரு தொடர்களுமே சன் தொலைக்காட்சியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகின்றன.
ராஜா ராணி தொடரின் மூலமே தனி ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்தியதால், இவர்கள் தனித்தனியாக நடித்துவரும் தொடருக்கும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு உள்ளது.
இதனிடையே தங்களின் நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை சென்னையில் இவர்கள் வாங்கியுள்ளனர். அதன் புதுமனை புகுவிழாவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
நடன இயக்குநர் கலா, சைத்ரா ரெட்டி, ஹிமா பிந்து, வானத்தை போல, கயல், இனியா ஆகிய தொடரின் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அது தொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடிக்கு சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.