தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் மகளின் திருமணம்!

சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் மகளின் திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

திருச்செல்வம் இல்லத் திருமண நிகழ்வில் நடிகைகள் பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை

Published On :

சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் மகளின் திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

எதிர்நீச்சல் தொடர் முடிந்த நிலையில், அத்தொடரில் நடித்த பலரும் திருச்செல்வம் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

எதிர்நீச்சல் தொடர் முடிந்ததால், இறுதி நாள் படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் அனைவரும் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்றனர். மதுமிதா, ஹரிபிரியா, சத்யா தேவராஜன் ஆகியோர் தங்கள் சமூகவலைதளப் பக்கத்திலும் எதிர்நீச்சல் தொடர் உடனான நெருக்கத்தையும், அது முடிவடைந்து தாங்கள் பிரிவதால் ஏற்படும் துக்கத்தையும் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிலையில், எதிர்நீச்சல் தொடரின் மொத்த குழுவும், திருச்செல்வம் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

திருமண விழாவில் மணமக்களுடன் எதிர்நீச்சல் குழு

திருமண விழாவில் மணமக்களுடன் எதிர்நீச்சல் குழு - dinamani

இயக்குநர் திருச்செல்வத்தின் ஒரே மகள் பிரியவர்ஷினி. இவர் குஜராத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனிங் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து அது சார்ந்த துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

திருமண விழாவில் எதிர்நீச்சல் குழு

திருமண விழாவில் எதிர்நீச்சல் குழு - dinamani

இந்நிலையில் பிரியவர்ஷினியின் திருமணம் சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் எதிர்நீச்சல் குழு உள்பட சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.