எதிர்நீச்சலின் இறுதி நாள் - கண்கலங்கிய நடிகைகள்! மதுமிதா வெளியிட்ட விடியோ!!

எதிர்நீச்சலின் இறுதி நாள் - கண்கலங்கிய நடிகைகள்! மதுமிதா வெளியிட்ட விடியோ!!

எதிர்நீச்சல் தொடரில் இறுதி நாளின் நிகழ்வுகளை நடிகை மதுமிதா விடியோவாக பதிவு செய்து அதனை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Published on

எதிர்நீச்சல் தொடரில் இறுதி நாளின் நிகழ்வுகளை நடிகை மதுமிதா விடியோவாக பதிவு செய்து அதனை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எதிர்நீச்சல் தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பு என்பதால், சக நடிகைகள் கண் கலங்கி தங்களின் அனுபவங்களை அந்த விடியோவில் பகிர்ந்துள்ளனர்.

ஜனனி, ஈஸ்வரி, நந்தினி, ரேணுகாவாகவாக இறுதிநாளில் மேக்கப் போட்டுக்கொள்ளும்போது மிகவும் கனத்த இதயத்துடன் நடிக்கச் சென்றதாக அவர்கள் விடியோவில் பேசியுள்ளனர்.

அதோடு எதிர்நீச்சல் தொடரில் ஜீவானந்தமாக நடித்திருந்த இயக்குநர் திருச்செல்வம்,

நடிகை மதுமிதாவுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வாழ்த்துகளையும் வழங்கியுள்ளார்.

உடன் நடித்த சக நடிகர்களும் நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் எதிர்நீச்சல் தொடருனான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.

படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் சம்பவங்களை விடியோக்களாக, ரீல்ஸ்களாக வெளியிட்டு வருவது நடிகை மதுமிதாவின் வழக்கம். சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய அவர், ரசிகர்களுடன் உரையாடும் வகையில் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

அதில் தன்னுடைய தனிப்பட்ட பயணங்களையும், அனுபவங்களையும் விடியோக்களாக பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது எதிர்நீச்சல் தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் பேட்டி எடுப்பதைப் போன்று, இறுதிநாள் கருத்தைக் கேட்டு அதனை விடியோவில் இணைத்துள்ளார்.

எதிர்நீச்சல் தொடருக்கு குடும்பத் தலைவிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையைச் சேர்ந்த பலரிம் ரசிகர்களாக உள்ளனர். அதனால், யூடியூப் பக்கத்திலும் எதிர்நீச்சல் முன்னோட (புரோமோ) விடியோக்களுக்கு வரவேற்பு அதிகம்.

தற்போது எதிர்நீச்சல் தொடரின் இறுதிநாள் அனுபவத்தை மதுமிதா யூடியூபில் பகிர்ந்துள்ளதால், மதுமிதாவின் ரசிகர்களும், எதிர்நீச்சல் ரசிகர்களும் அந்த விடியோவுக்கும் நடிகர்களுக்கும் வாழத்து தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

விரைவில் எதிர்நீச்சல் பாகம் 2 வர வேண்டும் என்றும், அதில் இந்த நடிகர், நடிகைகளை மீண்டும் வேறூ கோணத்தில் பார்க்க வேண்டும் எனவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com