
தமிழில் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஹிந்தியில் தமிழை விட அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.
ஹிந்தி, மராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ளார். மேலும், அரசியல் ரீதியான கருத்துக்களையும் வெளிப்படையாக பேசுபவர்.
துணிச்சலான நடிகையான ராதிகா ஆப்தே சில படங்களில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சியளித்தார்.
ராதிகா ஆப்தே விரைவில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் அதற்காக நடிப்பை கைவிடப்போவதில்லை என்றும் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
தங்களை இளமையாகவும் கவர்ச்சியாகவும் காட்டிக்கொள்ள பல நடிகைகள் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்களென நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்ததும் சர்ச்சையானது.
‘மேட் இன் ஹெவன் 2’ தொடரில் தலித் பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார்.
விஜய் சேதுபதியுடன் மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். தற்போது 2 புதிய ஆங்கிலப் படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் 5 வாரங்களாக புகைப்படங்களைப் பகிராமல் இருந்து தற்போது புதிய படத்தினை பகிர்ந்துள்ளார். ’சடோரி வைஷாலி எஃப்டபிள்யூ 24’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.