சாரா அலி கான்.
சாரா அலி கான்.

உள்ளுணர்வும் தர்க்க பூர்வமான பார்வையும்... சாரா அலி கானின் புதிய பிரச்னை!

நடிகை சாரா அலி கான் தனது உள்ளுணர்வு, தர்க்கம் குறித்து சிந்தனைகளால் பெரிதும் பாதித்தாகக் கூறியுள்ளார்.
Published on

நடிகை சாரா அலி கான் தனது முதல் படத்தை மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் உடன் கேதர்நாத் படத்தில் நடித்திருந்தார். 2018இல் வெளியான இப்படத்தினை அபிஷேக் கபூர் இயக்கினார். இந்து மதத்தினைச் சேர்ந்த பெண், முஸ்லீம் ஆணை காதலிப்பது போன்ற கதை. 2013 அன்று கேதர்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினை அடிப்படையாகவும் அந்த காதலையும் தொடர்புபடுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படம் இருவரது நடிப்பும் பாராட்டப்பட்டது.

நடிகர் தனுஷுடன் அட்ரங்கி ரே எனும் படத்தில் நடித்துள்ளார். தமிழில் கல்யாண கலாட்டா என்ற பெயரில் வெளியானது. இதில் வரும் சக்க சக்க பாடல் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

சாரா அலி கான்.
சாரா அலி கான்.

கடந்த மார்ச் 21ஆம் நாள் சாரா அலிகான் நடிப்பில் ஏ வாடன் மேரி வாடன் எனும் படம் அமேசான் பிரைமில் வெளியானது. தற்போது 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சாரா அலி கான் பேசியதாவது:

சாரா அலி கான்.
முதல்நாளில் அதிக வசூல்: ‘டாப் 10’ இந்திய திரைப்படங்களில் ஒரேயொரு தமிழ்ப்படம்!

சினிமா பயணத்தின் தொடக்க காலத்திலேயே எனது கலப்படமற்ற தன்மை அனைவருக்கும் தெரிந்துவிட்டது. நான் எதையுமே மறைப்பதில்லை. தோன்றியதை மக்களுக்கு தெரிவித்துவிடுவேன். அதனால் நான் மற்றவர்களுடன் ஒப்பிடப்பட்டேன், மதிப்பிடப்பட்டேன். அதனால் நான் வெறுமையானேன். பின்னர் அந்தப் பழக்கத்தை மெதுவாக கைவிட ஆரம்பித்தேன்.

முடிவுகள் எடுக்கும்போது நான் உள்ளுணர்வுகளை நம்பியிருந்தேன். பின்னர் படிப்படியாக லாஜிக்கலாக சிந்திக்க ஆரம்பித்தேன். அது எனக்கு ஒத்துவரவில்லை. பின்னர் இந்தப் பிரச்னைகளை எப்படி வடிகட்டினேன் என்றால், அது எனக்கு தெரியாது. நாம் எதாவது பொய்யாக நடந்தால் அது நமது உடலுக்கு தெரியும். அது நமக்கு சமிக்ஞை தரும்.

சாரா அலி கான்.
சூட்சும தர்ஷினியாக ‘நஸ்ரியா’...!

இருப்பினும் உள்ளுணர்வு சொல்லுவதை விடவும் லாஜிக்கலாக (தர்க்க பூர்வமான) சிந்திக்கும் பண்பிற்கு மாறினேன். இந்த மாற்றத்தினால் எனக்கு முதலில் அசௌகரியமாக இருந்தது. பின்னர் உள்ளுணர்வினையும் மேதாவிதனத்தையும் சரிசமமாக பார்க்கும் பண்பை வளர்க்கத் தொடங்கினேன்.

மிகவும் லாஜிக்கலாக (தர்க்க பூர்வமான) சிந்திப்பது எனது இயல்பான பண்பினை மிகவும் பாதித்தது. இந்தச் சமநிலை மிகப் பெரிய தொல்லையை ஏற்படுத்தியது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்