குக் வித் கோமாளி தயாரிப்பு நிறுவனம் விலகல்!

குக் வித் கோமாளி தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன்ஸ் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளது.
குக் வித் கோமாளி தயாரிப்பு நிறுவனம் விலகல்!
Published on
Updated on
1 min read

மீடியா மேசன்ஸ் தயாரிப்பு நிறுவனம் விஜய் தொலைக்காட்சியில் பல பிரபலமான நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளது. அதில் சூப்பர் சிங்கர், மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றன.

கிட்டதட்ட 25 ஆண்டுகளாக விஜய் டிவியின் ஒரு அங்கமாக மீடியா மேசன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இருந்து வந்துள்ளது. கடந்த மே மாதமே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட்டு விலகிய மீடியா மேசன்ஸ், தற்போது விஜய் டிவியில் இருந்தே விலகுவதாக அந்நிறுவனத்தின் முக்கிய நபரான ரைவ்ஃபா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரைவ்ஃபா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் தொலைக்காட்சியில் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து, விஜய் டிவியில் மட்டுமே பணிபுரிந்தோம் மற்றும் இது எங்களுக்கு இரண்டாவது வீடு!

எண்ணற்ற நிகழ்ச்சிகளைத் தயாரித்தோம். தற்போது ஸ்டார் விஜய் நிறுவனத்தில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த மே மாதம் சூப்பர் சிங்கரில் இருந்து விலகுவது பற்றி தெரிவித்த போது, சூப்பர் சிங்கரில் இருந்து தான் விலகிறோம் என்று நினைத்தோம்.

குக் வித் கோமாளி தயாரிப்பு நிறுவனம் விலகல்!
சஞ்சீவ் - ஸ்ருதி ராஜ் நடிக்கும் புதிய தொடரின் ப்ரோமோ!

மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் இன்னும் சில சீசன்களைத் தொடர்ந்து பயணிப்போம் என்று நினைத்தோம்.

ஆனால் தற்போது எதிர்பாராத சூழ்நிலைகளால் மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளின் அடுத்த சீசன்களை தயாரிக்கவில்லை. தற்போது கனத்த இதயத்துடன் இந்த 2 நிகழ்ச்சிகளிலிருந்தும் வெளியேறுகிறோம்.

எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி! எங்களுக்கு உதவிய ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!

மேலும், எங்களை உற்சாகப்படுத்திய மற்றும் கடினமாக உழைக்க ஊக்குவித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பெரிய அரவணைப்பு!” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com