தாலியுடன் சிறகடிக்க ஆசை தொடர் நடிகை! வைரல் புகைப்படம்!

தாலியுடன் சிறகடிக்க ஆசை தொடர் நடிகை வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாலியுடன்  சிறகடிக்க ஆசை தொடர் நடிகை! வைரல் புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் சிறகடிக்க ஆசை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக டிஆர்பி பெறும் தொடராக இத்தொடர் உள்ளது.

2023 ஜனவரி மாதம் முதல் இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் கோமதி பிரியா, வெற்றி வசந்த் பிரதான பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இத்தொடரில் நடித்துவரும் கோமதி பிரியா தமிழில் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளத் தொடர்களில் நடித்து வருகிறார். சிறகடிக்க ஆசை தொடரின் மறு உருவாக்கமாக மலையாளத்தில் செம்பனிர் பூவு தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இத்தொடரிலும் கோமதி பிரியாவே நடித்து வருகிறார்.

தாலியுடன்  சிறகடிக்க ஆசை தொடர் நடிகை! வைரல் புகைப்படம்!
லட்சுமி சீரியலால் முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

நடிகை கோமதி பிரியா, இன்ஸ்டா கிராமில் பக்கத்தில் அவ்வபோது புகைப்படங்களையும், விடியோக்களையும் வெளியிட்டுக்கொண்டே இருப்பார்.

இந்நிலையில், தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை சிறகடிக்க ஆசை தொடர் கோமதி பிரியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். செம்பனிர் பூவு தொடரில் இவருக்கு திருமணம் ஆகும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இப்புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கோமதி பிரியா வெளியிட்ட புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com