‘ஊ சொல்றியா’ நடனத்தின்போது பயந்து நடுங்கினேன்: சமந்தா

நடிகை சமந்தா புஷ்பா படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா' பாடல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
‘ஊ சொல்றியா’ நடனத்தின்போது பயந்து நடுங்கினேன்: சமந்தா
DOTCOM

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு  ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

தற்போது, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதனால், பல தயாரிப்பாளர்கள் சமந்தாவை அணுகி வருகின்றனர்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய சமந்தா, “புஷ்பா படத்தில் இடம்பெற்ற ’ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு ஆடும்போது பயந்து நடுங்கினேன். காரணம், கவர்ச்சியாக நடிப்பது எனக்குத் தெரிந்தது அல்ல. அந்த அனுபவத்தைப் பெறவே அப்பாடலில் நடித்தேன். முதல் ஷாட்டின்போதே பயம் ஏற்பட்டது. பேமிலி மேன் தொடரில் எப்படி நடித்தேனோ அதேபோலத்தான் இப்பாடலுக்கும் நடனமாடினேன். ஒரு பெண்ணாக இருப்பதன் சிரமங்களையும் சந்தித்திருக்கிறேன்” எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com