புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சூது கவ்வும் - 2 அப்டேட்!

சிவா நடிப்பில் உருவாகி வரும் சூது கவ்வும் - 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

News image

DOTCOM

Updated On :18 மார்ச் 2024, 11:28 am

DIN

கடந்த 2013 ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது. இதில் சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்துள்ளார். படத்தின் முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கி இருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே. அர்ஜுன் இயக்குகிறார்.

Story image

இந்த படத்தில் ஹரிஷா, ராதாரவி, கருணாகரன், எம்எஸ் பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்போது, இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வருகிற மார்ச்.22 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.